தேர்தல் பணியாற்றிய ஊழியர்களுக்கான மதிப்பூதியம் இம்மாத இறுதிக்குள் விடுவிக்கப்படாவிட்டால் நடவடிக்கை

தேர்தல் பணியாற்றிய ஊழியர்களுக்கு மதிப்பூதியத் தொகை சுமார் 56 கோடி ரூபாயை இந்த மாத இறுதிக்குள் விடுவிக்கப்படாவிட்டால் சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரத சாஹு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தேர்தல் பணியாற்றிய ஊழியர்களுக்கான மதிப்பூதியம் இம்மாத இறுதிக்குள் விடுவிக்கப்படாவிட்டால் நடவடிக்கை
x
தேர்தல் பணியாற்றிய ஊழியர்களுக்கு மதிப்பூதியத் தொகை சுமார் 56 கோடி ரூபாயை இந்த மாத இறுதிக்குள் விடுவிக்கப்படாவிட்டால் சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரத சாஹு எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அரசாணையில், தமிழகத்தில் 67 ஆயிரத்து 669 வாக்குச்சாவடி அலுவலர்களும், 6 ஆயிரத்து 414 கண்காணிப்பாளர்களும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  2018-2019-ஆம் ஆண்டில் 29 மாவட்டங்களிலும் பணியாற்றியவர்களுக்கு  பயணப்படி மற்றும் மதிப்பூதியமாக மொத்தம் 56 கோடி ரூபாய் விடுவிக்கப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்