நாளை போலியோ சொட்டு மருந்து முகாம்

தமிழகம் முழுவதும் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு நாளை போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
நாளை போலியோ சொட்டு மருந்து முகாம்
x
தமிழகத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் மற்றும் முக்கிய இடங்கள் என 43 ஆயிரத்து 51 மையங்கள் மூலம் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும் என்றும், இதன் மூலம் தமிழகத்தில் உள்ள 72 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சொட்டு மருந்து வழங்கும் மையங்கள் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும் எனவும் எனவே பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கும் படி அரசு அறிவுறுத்தியுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்