மகளிர் தின விழா : ஆசிரியை, மாணவிகளை அரசிகளாக்கிய பள்ளி...
திருச்சி மாவட்டம், ஊனையூரில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் வித்தியாசமான முறையில், மகளிர் தினம் கொண்டாடப்பட்டது.
திருச்சி மாவட்டம், ஊனையூரில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் வித்தியாசமான முறையில், மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில், மாணவிகள் மற்றும், ஆசிரியைகள் அழைக்கப்பட்டு அரசியாக பட்டம் சூட்டப்பட்டது. அரசிகளாக தாங்கள் அறிவிக்கப்பட்டதும், மாணவிகள், உற்சாகமடைந்தனர். இதனை தொடர்ந்து, சுகிந்தா என்ற சிறுமி சிலம்பாட்டம் ஆடியது, அனைவரின் கவனத்தையும் வெகுவாக ஈர்த்தது. இதே போல் மாணவிகள், ஆபத்தான காலக்கட்டங்கள் தங்களை எப்படி தற்காத்து கொள்வது என்பது குறித்து செய்து காட்டி அசத்தினர்.
Next Story