"கச்சத்தீவு திருவிழாவிற்கு நாட்டு படகில் செல்லலாம்" - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

பாரம்பரிய மீனவர்கள் நாட்டுப்படகில் குடும்பத்துடன் கச்சத்தீவு அந்தோணியார் கோவிலுக்கு செல்வதற்கான அனுமதியை நீதிமன்றம் கடந்த ஆண்டு வழங்கியது.
கச்சத்தீவு திருவிழாவிற்கு நாட்டு படகில் செல்லலாம் - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
x
பாரம்பரிய மீனவர்கள் நாட்டுப்படகில் குடும்பத்துடன் கச்சத்தீவு அந்தோணியார் கோவிலுக்கு செல்வதற்கான அனுமதியை நீதிமன்றம் கடந்த ஆண்டு வழங்கியது.  இதனையடுத்து  மீன்வள துறை அதிகாரிகள் 2 தினங்களுக்கு முன் பாம்பன் பகுதிக்கு வந்து கச்சத்தீவுக்கு செல்லக்கூடிய நாட்டுபடகுகளில் ஆய்வு மேற்கொண்டனர். அவர்கள் கொடுத்த ஆய்வு அறிக்கையை அடுத்து ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் நாட்டுப்படகில் கச்சத்தீவு திருவிழாவில் கலந்துகொள்ள பாரம்பரிய மீனவர்களுக்கு அனுமதி வழங்கினார். ராமேஸ்வரத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், கச்சத்தீவு திருவிழாவுக்கு 15 நாட்டுப்படகுகளில் 240 பேர் கலந்து கொள்வார்கள் என்று தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்