இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுக்க முயன்றதாக வழக்கு - பாட்டியாலா நீதிமன்ற விசாரணைக்கு தடை
தினகரன் மீதான வழக்கை பாட்டியாலா நீதிமன்றம் விசாரிக்க, டெல்லி உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
இரட்டை இலை சின்னத்தை தமது அணிக்கு சாதமாக மாற்ற,தேர்தல் ஆணையத்தில் உள்ள சில அதிகாரிகளுக்கு,லஞ்சம் தர முயன்றதாக டிடிவி தினகரன் உள்ளிட்ட 9 பேர் மீது,டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது.இதனையடுத்து, தம் மீதான குற்றச்சாட்டுகளை ரத்து செய்யக்கோரி தினகரன் தரப்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.இந்த வழக்கை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி சுணில் கவுர்,வரும் 20-ம் தேதி வரை தினகரன் உள்ளிட்ட ஒன்பது பேரையும் விசாரிக்கத் தடை விதித்துள்ளது.இதுபற்றி பதிலளிக்க டெல்லி போலீஸ் தரப்புக்கும் உத்தரவிட்டுள்ளார்.மேலும் இந்த வழக்கின் விசாரணையை வரும் 20-ம் தேதிக்கு ஒத்தி வைத்தும் உத்தரவிட்டார்.
Next Story