தமிழகத்தில் சேவை பெறும் உரிமை சட்டம் எப்போது அமல் ? - உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி
தமிழகத்தில் சேவை பெறும் உரிமை சட்டம் எப்போது அமல்படுத்தப்படும் என தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் சேவை பெறும் உரிமை சட்டம் எப்போது அமல்படுத்தப்படும் என தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. தென்னிந்திய நுகர்வோர் மற்றும் மக்கள் உரிமை பாதுகாப்பு கவுன்சில் தலைவர் மணவாளன், உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் தமிழகத்தில் எப்போது சேவை பெறும் உரிமைச் சட்டம் நிறைவேற்றப்படும்? என கேள்வி எழுப்பினர். இது தொடர்பாக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கை மார்ச் 21ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
Next Story