காட்டேரி பூங்காவில் முதல் சீசன் : ஒன்றரை லட்சம் மலர் நாற்றுகள் நடவு பணி துவக்கம்
இயற்கை சூழலில் அமைந்துள்ள குன்னுார் காட்டேரி பூங்காவில் முதல் சீசனுக்காக ஒன்றரை லட்சம் மலர் நாற்றுகள் நடவு செய்யும் பணி இன்று துவங்கியது.
இயற்கை சூழலில் அமைந்துள்ள குன்னுார் காட்டேரி பூங்காவில் முதல் சீசனுக்காக ஒன்றரை லட்சம் மலர் நாற்றுகள் நடவு செய்யும் பணி இன்று துவங்கியது. நடவு பணியை குன்னுார் தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் ராஜ்கோபு தொடங்கிவைத்தார். இதில் ஆன்ட்ரினம், பெடுனியா, பால்சம், பெகோனியா போன்ற 30 வகையான மலர் நாற்றுகள் நடவு செய்யப்பட உள்ளன. இந்த மலர் விதைகள் ஜெர்மனி, பிரான்ஸ், நெதர்லாந்து உள்ளிட்ட நாடுகள் மட்டுமின்றி, பஞ்சாப், கொல்கத்தா காஷ்மீர் போன்ற பகுதிகளிலிருந்தும் விதைகள் பெறப்பட்டு நாற்றுகள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன.
Next Story