21 அரிவாள் மீது நடந்து அருள்வாக்கு கூறிய பூசாரி : குழந்தையை அரிவாள் மீது நடக்க வைத்த அதிர்ச்சி சம்பவம்
மிளகாய் கரைசலில் உற்சாக குளியல் போட்ட பூசாரி
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை அடுத்த இளையரசனேந்தலில் உள்ள பதினெட்டாம்படி கருப்பசாமி கோவிலின் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. விழாவின் மூன்றாம்நாளான இன்று கோயிலின் பூசாரி விநோதமான முறையில் அரிவாள்கள் மீது நடந்தபடி அருள்வாக்கு கூறினார். அப்போது அங்கிருந்த ஒரு தாயிடம் இருந்து ஒரு வயது குழந்தையை கையில் வாங்கிய பூசாரி யாரும் எதிர்பாராத நிலையில் குழந்தையை அரிவாள் மீது நிற்க செய்தது பக்தர்களை அதிர்ச்சியடைய வைத்தது. இதன் பின்னர் கீழே இறங்கிய சாமியார், எழுபது கிலோ மிளகாய் பொடி கரைசலை தன் உடல்மீது ஊற்றிக்கொண்டார். இந்நிகழ்வை அப்பகுதியை சேர்ந்த ஏராளமனோர் கண்டுகளித்தனர்.
Next Story