"அரசு பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு ரத்து செல்லாது" - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

2017ஆம் ஆண்டு ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய தேர்வில், 196 பேர் முறைகேடு செய்ததாக புகார் எழுந்தது
அரசு பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு ரத்து செல்லாது - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
x
2017ஆம் ஆண்டு ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய தேர்வில், 196 பேர் முறைகேடு செய்ததாக புகார் எழுந்தது. இதனைத் தொடர்ந்து தமிழக அரசு இந்த தேர்வை ரத்து செய்தது. இதனை எதிர்த்து சென்னை மற்றும் மதுரை நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்கை விசாரித்த  நீதிபதிகள் சசிதரன், ஆதிகேசவலு  அமர்வு, தேர்வை ரத்து செய்தது செல்லாது என தீர்ப்பளித்தது. முறைகேட்டில் ஈடுபட்ட 196 பேர் மீது மட்டும் நடவடிக்கை எடுத்துவிட்டு, தேர்ச்சி பெற்ற தகுதியான நபர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தி பணி நியமனம் வழங்க வேண்டும் என்று மதுரை கிளை தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை,  நீதிபதிகள் உறுதி செய்தனர். மேலும் தேர்வு நடைமுறைகளை ஏப்ரல் 30 ஆம் தேதிக்குள் முடிக்கவும் அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்