ரூ.2,000 சிறப்பு நிதியுதவி திட்டம் செயல்படுமா? - உயர் நீதிமன்றம் இன்று அறிவிப்பு
வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு, 2 ஆயிரம் ரூபாய் சிறப்பு நிதியுதவி வழங்கும் திட்டம் தொடர்பான வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படுகிறது.
வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு, 2 ஆயிரம் ரூபாய் சிறப்பு நிதியுதவி வழங்கும் திட்டம் தொடர்பான வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படுகிறது. விழுப்புரத்தை சேர்ந்த கருணாநிதி என்பவர் தாக்கல் செய்த பொதுநல வழக்கில், 2 ஆயிரம் ரூபாய் சிறப்பு நிதியுதவி திட்டத்தை அமல்படுத்துவது குறித்த அரசாணையில் திருத்தம் செய்தது தொடர்பாக, அவசர வழக்காக விசாரிக்க கோரிக்கை விடுத்தார். இந்த நிலையில், விசாரணை முடிந்து விட்டதால், இன்று தீர்ப்பு அளிக்கப்படும் என்று உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.
Next Story