தாய்க்கு சிறுநீரகத்தை வழங்க துடிக்கும் மகன் : பாசப்போராட்டத்தை கண்டு கண் கலங்கிய நீதிபதி
தாய்க்கு சிறுநீரகத்தை கொடுக்க துடிக்கும் மகனின் பாசப்போராட்டத்தை கண்டு கண்கலங்கிய நீதிபதி, சிகிச்சைக்கு அனுமதி வழங்க உத்தரவிட்டுள்ளார்.
புதுச்சேரியை சேர்ந்த செந்தில்குமார் என்பவர், உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை சட்டக்குழுவின் அனுமதி பெறுவதற்காக உயர்நீதிமன்றத்தை நாடியுள்ளார். செந்தில்குமாரின் பாசப்போராட்டத்தை கண்ட நீதிபதி ரவிச்சந்திரபாபு, கண்கலங்கினார். இதனை தொடர்ந்து அவரது விண்ணப்பத்திற்கு அனுமதி அளிக்கும்படி உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை சட்டக்குழுவிற்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
Next Story