நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவு : தமிழக ஏரி-ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்கம் அறிவிப்பு
தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்கத்தின் மாநில உயர்நிலை குழு கூட்டம் திருச்சியில் நடைபெற்றது.
தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்கத்தின் மாநில உயர்நிலை குழு கூட்டம் திருச்சியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், விவசாயத்திற்கு தனி பட்ஜெட், விவசாயிகளின் உற்பத்தி மற்றும் இடுபொருளுக்கு ஜி.எஸ்.டி. வரி ரத்து மற்றும் டெல்டா பகுதியை வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய, மாநில தலைவர் விஸ்வநாதன், காங்கிரஸ், தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவு அளிக்க முடிவு செய்துள்ளதாக கூறினார்.
Next Story