திருவள்ளுவர் பல்கலைக்கழகத்திற்கு புதிய துணைவேந்தர் நியமனம் - ஆளுனர் அறிவிப்பு
வேலூரில் உள்ள திருவள்ளுவர் பல்கலைக்கழக புதிய துணைவேந்தராக பேராசிரியர் தாமரைச்செல்வியை நியமனம் செய்து, ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உத்தரவிட்டுள்ளார்.
வேலூரில் உள்ள திருவள்ளுவர் பல்கலைக்கழக புதிய துணைவேந்தராக பேராசிரியர் தாமரைச்செல்வியை நியமனம் செய்து, ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உத்தரவிட்டுள்ளார். ஆளுனர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், அடுத்த 3 ஆண்டுகளுக்கு அவர் துணைவேந்தராக பதவி வகிப்பார் என்று கூறப்பட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழக எம்.ஐ.டி., வளாகத்தில் கம்ப்யூட்டர் சயின்ஸ் துறையில் பேராசிரியராக 35 ஆண்டுகள் பணியாற்றி அனுபவம் பெற்றவர் தாமரை செல்வி என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story