தலையில் தேங்காய் உடைத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் : மகா சிவராத்திரியை முன்னிட்டு நடந்த வினோத திருவிழா

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் மகா சிவராத்திரியை முன்னிட்டு நடைபெற்ற திருவிழாவில் தலையில் தேங்காய் உடைத்து பக்தர்கள் நேர்த்திக் கடன் செலுத்தினர்
தலையில் தேங்காய் உடைத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் : மகா சிவராத்திரியை முன்னிட்டு நடந்த வினோத திருவிழா
x
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் மகா சிவராத்திரியை முன்னிட்டு நடைபெற்ற திருவிழாவில் தலையில் தேங்காய் உடைத்து பக்தர்கள் நேர்த்திக் கடன் செலுத்தினர். அங்குள்ள விளாமுண்டி பொம்மி கோயிலில், நடைபெற்ற இந்த விழாவில் 2000 க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டனர். விழாவை முன்னிட்டு சிறப்பு அலங்கார பூஜை மற்றும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. பின்னர் தாரை தப்பட்டை முழங்க 3 ஆலயங்களிலும் சாமி முன்பு வைக்கப்பட்டுள்ள தேங்காய்களை பக்தர்கள் எடுத்து கோயிலின் வெளியே வந்து தலையில் உடைத்தும், தனக்குத்தானே சாட்டையால் உடலில் அடித்தும் நேர்த்திக்கடன் செலுத்தி பக்தர்கள் வழிபாடு நடத்தினர். 

Next Story

மேலும் செய்திகள்