ஜாக்டோ ஜியோ வேலை நிறுத்த வழக்கு : கோரிக்கை குறித்து அரசு பதில் அளிக்க வேண்டும் - உயர்நீதிமன்ற கிளை உத்தரவு

4 பேரை தவிர மற்ற பணி இடை நீக்கம் திரும்ப பெறப்பட்டுள்ளது.உயர்நீதிமன்ற கிளையில் அரசு தகவல்
ஜாக்டோ ஜியோ வேலை நிறுத்த வழக்கு : கோரிக்கை குறித்து அரசு பதில் அளிக்க வேண்டும் - உயர்நீதிமன்ற கிளை உத்தரவு
x
ஜாக்டோ ஜியோ தரப்பு வழக்கறிஞர் தங்கள் கோரிக்கை குறித்து அரசு வழக்கறிஞரிடம் கொடுக்கவும், அதற்கு அரசு தரப்பில் பதிலளிக்கவும் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக மதுரையைச் சேர்ந்த லோகநாதன் என்பவர்,தொடர்ந்த வழக்கில் விசாரணை நீதிபதிகள் கிருபாகரன், S.S.சுந்தர் அமர்வு முன்பு நடைபெற்றது. அப்போது வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட ஜாக்டோ ஜியோ அமைப்பினரில், 4 பேரை தவிர மற்ற அனைவரின்  பணி இடை நீக்கம் திரும்ப பெறப்பட்டுள்ளது என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கைகளை திரும்ப பெறுவது குறித்து அரசிடம் தகவல் பெற்று தெரிவிப்பதாக அரசு வழக்கறிஞர் தெரிவித்தார். ஜாக்டோ ஜியோ தரப்பு வழக்கறிஞர் தங்கள் கோரிக்கைகளை அரசு வழக்கறிஞரிடம் கொடுக்கவும், அதற்கு அரசு தரப்பில் பதிலளிக்கவும் உத்தரவிட்டு வழக்கு விசாரணையை 11 ஆம் தேதி நீதிபதிகள்  தள்ளி வைத்தனர்.

Next Story

மேலும் செய்திகள்