ரூ.2000 சிறப்பு நிதி வழங்கும் திட்டம் : இன்று துவக்கி வைக்கிறார் முதலமைச்சர்
ஏழை தொழிலாளர் குடும்பங்களுக்கு 2 ஆயிரம் ரூபாய் சிறப்பு நிதி வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைக்கிறார்.
ஏழை தொழிலாளர் குடும்பங்களுக்கு 2 ஆயிரம் ரூபாய் சிறப்பு நிதி வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைக்கிறார்.
2 ஆயிரம் ரூபாய் சிறப்பு நிதி உதவியை பெற தகுதியானவர்களை கணக்கெடுத்து பெயர் பட்டியலை தயாரிக்கும் பணி மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, கிராம ஊராட்சி வாரியாக தீவிரமாக நடந்து வருகிறது. இதற்கென தனியாக விண்ணப்ப படிவம் தயாரிக்கப்பட்டுள்ளது. பயனாளிகள் தேர்வு பணி ஒருபுறம் நடந்து வந்தாலும் இந்த திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைக்கிறார். குறிப்பிட்ட சில பயனாளிகளின் வங்கி கணக்கில் சிறப்பு நிதியான ரூ.2 ஆயிரத்தை செலுத்தி இந்த திட்டம் தொடங்கி வைக்கப்படுகிறது.
Next Story