ஜிப்மர் ஆன் லைன் நுழைவுத்தேர்வு : "ஒரே நேரத்தில் நடத்த உத்தரவிட முடியாது" - உயர்நீதிமன்றம்

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக்கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கு ஒரே நேரத்தில் தேர்வு நடத்தக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
ஜிப்மர் ஆன் லைன் நுழைவுத்தேர்வு : ஒரே நேரத்தில் நடத்த உத்தரவிட முடியாது - உயர்நீதிமன்றம்
x
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக்கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கு ஒரே நேரத்தில் தேர்வு நடத்தக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த தனி நீதிபதி,  ஒரே நேரத்தில் மாணவர்கள் தேர்வெழுதும் வகையில் வசதிகளை அதிகரிக்கும்படி உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து ஜிப்மர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், வி.பாவானி சுப்பராயன் ஆகியோர், 124க்கும் மேற்பட்ட நகரங்களில், ஒரு லட்சத்து 54 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விண்ணப்ப தாரர்களுக்கு ஒரே நேரத்தில் ஒரே மாதிரியான கேள்வித்தாள்களுடன் தேர்வு நடத்த உத்தரவிட முடியாது என உத்தரவிட்டனர்.

Next Story

மேலும் செய்திகள்