2011 ஆம் ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டு வரை கலைமாமணி விருதுகள் அறிவிப்பு
2011 ஆம் ஆண்டுமுதல் 2018 ஆம் ஆண்டு வரையிலான கலைமாமணி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
* 2011 ஆம் ஆண்டுமுதல் 2018 ஆம் ஆண்டு வரையிலான கலைமாமணி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
* 2011 ஆம் ஆண்டுக்கான கலைமாமணி விருதுகள் நடிகர் பாண்டு, டான்ஸ் மாஸ்டர் புலியூர் சரோஜா, நடிகை குட்டி பத்மினி, உள்ளிட்டோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளன
* 2012 ஆம் ஆண்டுக்கான கலைமாமணி விருதுகள், நடிகை வரலட்சுமி, கானா கலைஞர் உலகநாதன், பரத நாட்டிய கலைஞர் ரேவதி ராமச்சந்திரன் உள்ளிட்டோருக்கும், 2013 ஆம் ஆண்டுக்கான கலைமாமணி விருதுகள் நடிகர் பாண்டியராஜன், நாட்டுப்புற பாடகர் வேல்முருகன், நாட்டுப்புற பாடகி பரவை முனியம்மா உள்ளிட்டோருக்கும் வழங்கப்படுகிறது.
* 2014 ஆம் ஆண்டுக்கான விருதுகள் பட்டியலில் நடிகர் கார்த்தி, நடிகர் பொன் வண்ணன் உள்ளிட்டோர் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.
* 2015 ஆம் ஆண்டுக்கான கலைமாமணி விருதுகள், இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி, நடிகர் பிரபுதேவா ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளன.
* 2016 ஆம் ஆண்டுக்கான பட்டியலில் நடிகர்கள் சசிகுமார், எம்.எஸ்.பாஸ்கர், தம்பி ராமையா, சூரி உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.
* 2017 ஆம் ஆண்டு விருதுகள் பட்டியலில் நடிகர்கள் விஜய் சேதுபதி, சிங்கமுத்து, நடிகை பிரியாமணி, இயக்குனர் ஹரி, இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா, உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.
* 2018 ஆம் ஆண்டு கலைமாமணி விருதுகள் நடிகர்கள் சந்தானம், ஸ்ரீகாந்த், பின்னணி பாடகர் உன்னிமேனன், செய்தி வாசிப்பாளர் நிர்மலா பெரியசாமி, டாக்டர் அமுதகுமார் உள்ளிட்டோருக்கு வழங்கப்படுகின்றன.
Next Story