250 நாடுகளை பற்றி அறிந்துள்ள 5 வயது சிறுவன்

ஒரு நாட்டின் கொடியை காட்டினால் அந்த நாட்டின் பெயர், தலைநகரம், நாணயம் ஆகியவற்றை சரியாக கூறி அதிசயிக்க வைக்கிறான் சென்னையை சேர்ந்த 5 வயது சிறுவன்.
x
சென்னை அம்பத்தூரை சேர்ந்த முருகன், பொன் லட்சுமியின் 5 வயது மகன் வினுவரதன் தான் இந்த அதிசயத்தை நிகழ்த்துகிறான். இதுபோன்று 250 நாடுகளை பற்றி சரியான தகவல்களை வினுவரதன் சொல்வதாக கூறுகின்றனர் அவனது பெற்றோர். மேலும் 200 திருக்குறளையும் பிழையின்றி வினுவரதனால் கூறமுடியுமாம். இதற்காக 3 மாதங்கள் பயிற்சிகள் மேற்கொண்டதாகவும் மாவட்டம் மற்றும் மாநில அளவில பல போட்டிகளில் வென்றுள்ளதாகவும் அவனது பெருமையை பெற்றோர் விவரித்தனர். இது போன்ற திறமை கொண்ட பல குழந்தைகள் சமூகத்தில் இருந்தும் பொருளாதார நிலை காரணமாக வெளிவராமல் இருப்பதாகவும் அரசு அவர்களுக்கு உதவ வேண்டும் எனவும் வினுவரதனின் பெற்றோர் கோரிக்கை வைத்தனர்.

Next Story

மேலும் செய்திகள்