பாஜகவிற்கு எதிராக மதச்சார்பற்ற சக்திகள் ஒருங்கிணைய வேண்டும் - ஸ்டாலினை சந்தித்த பின் ஜிக்னேஷ் மேவாணி கருத்து

பாஜகவிற்கு எதிராக மதச்சார்பற்ற சக்திகள் ஒன்றிணைய வேண்டும் என்று குஜராத் சட்டமன்ற உறுப்பினர் ஜிக்னேஷ் மேவாணி கூறினார்.
பாஜகவிற்கு எதிராக மதச்சார்பற்ற சக்திகள் ஒருங்கிணைய வேண்டும் - ஸ்டாலினை சந்தித்த பின் ஜிக்னேஷ் மேவாணி கருத்து
x
பாஜகவிற்கு எதிராக மதச்சார்பற்ற சக்திகள் ஒன்றிணைய வேண்டும் என்று குஜராத் சட்டமன்ற உறுப்பினர் ஜிக்னேஷ் மேவாணி கூறினார். சென்னை வந்துள்ள அவர்,  திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்த பின் செய்தியாளர்களிடம் பேசினார்.அப்போது , திமுக தலைவர் ஸ்டாலினுடனான சந்திப்பு நட்பு ரீதியானது என்றும்,  ஜனநாயகத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் பாஜகவிற்கு எதிராக மதச்சார்பற்ற சக்திகள் ஒருங்கிணைய வேண்டும் என்றும் கூறினார். அதிமுக - பாஜக கூட்டணி , ஆட்சிக்கு வந்தால் மிகப்பெரிய பேரழிவாக மாறிவிடும் என்று கூறியதுடன், திமுக கூட்டணிக்கு பிரச்சாரம் செய்வது குறித்து யோசித்து முடிவெடுப்பேன் என்றும் குறிப்பிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்