சட்ட விரோத கைது நடவடிக்கையில் ஈடுபடும் காவல்துறையினருக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை - உயர்நீதிமன்றம் எச்சரிக்கை

சட்ட விரோத கைது நடவடிக்கையில் ஈடுபடும் காவல்துறையினருக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட நேரிடும் என உயர்நீதிமன்றம் எச்சரித்துள்ளது.
சட்ட விரோத கைது நடவடிக்கையில் ஈடுபடும் காவல்துறையினருக்கு எதிராக  ஒழுங்கு நடவடிக்கை - உயர்நீதிமன்றம் எச்சரிக்கை
x
சட்ட விரோத கைது நடவடிக்கையில் ஈடுபடும் காவல்துறையினருக்கு எதிராக  ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட நேரிடும் என உயர்நீதிமன்றம் எச்சரித்துள்ளது. 

செம்மர கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட  பில்லியர்ட்ஸ் விளையாட்டு வீரரான பொறியியல் மாணவர், ஜாமின் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இதனை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், இரு சக்கர வாகனத்தில் அழைத்து வந்ததற்காக கைது செய்யப்பட்டதாக மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டதை ஏற்று கொண்டு அவருக்கு  ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

உச்ச நீதிமன்ற விதிகளையும், சட்டத்தையும் மீறி கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளும் காவல் துறையினருக்கு எதிராகவும், இயந்திரத்தனமாக சிறையிலடைக்க உத்தரவு பிறப்பிக்கும் மாஜிஸ்திரேட்களுக்கு எதிராகவும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட உயர்நீதிமன்றம் தயங்காது என்றும் நீதிபதி எச்சரித்தார்.

Next Story

மேலும் செய்திகள்