கிராமத்தின் பெயரை மாற்றியதற்கு எதிர்ப்பு - மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த மக்கள்
தூத்துக்குடி அருகே கிராமத்தின் பெயரை மாற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அருகே உள்ள சுப்பிரமணியபுரம் என்ற கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் ஊரின் பெயரை மெய்யூர் என மாற்றி அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த கிராம மக்கள், பழைய பெயரே தொடர வேண்டும் என கூறி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
Next Story