புனரமைக்கப்பட்டு ஜொலிஜொலிக்கும் எம்.ஜி.ஆர். இல்லம்...
கேரள மாநிலம் பாலக்காடு அருகே உள்ள எம்.ஜி.ஆர். இல்லம், பளிங்கு சிலைகள், புத்தகங்களுடன் புனரமைக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி முன்னாள் மேயர் சைதை துரைசாமி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
* திரையுலகம், அரசியல், மக்களிடம் அன்பு செலுத்துதல் என ஆழமான முத்திரை பதித்தவர் மறைந்த முதலமைச்சர் எம்.ஜி.ஆர். பால்ய பருவத்தில் அவர் வாழ்ந்த பாலக்காடு மாவட்டம் வடவனூரில் உள்ள வீடு புதர்மண்டி வருவதை தந்தி டிவி வெளிக்கொண்டு வந்தது.
இதை கவனித்த அதிமுக மூத்த நிர்வாகியும், சென்னை மாநகராட்சி மு* ன்னாள் மேயருமான சைதை துரைசாமி, தமது அறக்கட்டளை மூலம், எம்.ஜி.ஆர். வாழ்ந்த வீட்டை புத்தம் புதியதாக புனரமைத்தார். இதில், வீடு ஜொலிஜொலிக்கிறது. அங்கு எம்.ஜி.ஆரின் பேச்சு, அவரை புகழ்ந்த ஒலிநாடா, புத்தகங்கள் இடம்பெற்றுள்ளன. சுற்றுலா பயணிகளாக வரும் எம்.ஜி.ஆரின் ரசிகர்கள் தங்குமிடம், திருமணம் செய்ய வசதி, இளைஞர் நலன் கூட்டம் நடத்த வசதி உள்ளிட்ட பல்வேறு ஏற்பாடுகள் இடம்பெற்றுள்ளது. இதில், எம்.ஜி.ஆரின் கற்சிலையும், அவரது பெற்றோருக்கு பளிங்கு சிலையும் வைக்கப்பட்டுள்ளது கூடுதல் சிறப்பு.
* எம்.ஜி.ஆர். நடித்த படத்தின் பாடல் இசைத்தட்டு உள்ளிட்டவை மீண்டும் பழைய நினைவுகளுக்கு ரசிகர்களை அழைத்துச் செல்ல உள்ளது. இந்த இல்லத்தை, கேரளா ஆளுநர் நாளை திறந்துவைப்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே, தமது தலைவரின் வீடு குறித்து நினைவூட்டிய தந்திடிவிக்கு சைதை துரைச்சாமி நன்றி தெரிவித்தார்.
Next Story