கப்பல்களுக்கு திசைக்காட்டும் போயா கருவி : வேதாரண்யம் அருகே கரை ஒதுங்கியதால் பரபரப்பு
நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே கரை ஒதுங்கிய போயா கருவியை, கைப்பற்றி போலீசார் மற்றும் வருவாய் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே கரை ஒதுங்கிய போயா கருவியை, கைப்பற்றி போலீசார் மற்றும் வருவாய் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். வேட்டைக்காரனிருப்பு அருகே கடற்கரையில் கரைஒதுங்கிய இந்த போயா கருவியின் எடை 2 டன்கள் ஆகும். இது கடற்பகுதியில் கப்பல்களுக்கு, திசைக்காட்ட மிதக்க விடப்படும் வகையை சேர்ந்த நிலையில், எந்த துறைமுகத்தில் இது மிதக்கவிடப்பட்டது என்றும், அது எவ்வாறு, இந்த பகுதிக்கு வந்தது என்றும் போலீசார், கியூ பிரிவு மற்றும் கடரோல காவல் குழும போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story