மயானத்துக்கு பாதை கோரி இறந்த உடலுடன் 4 மணி நேரம் போராட்டம் : நிரந்தர மயானம் மற்றும் பாதை ஏற்படுத்த வட்டாட்சியர் உறுதி

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே மயானத்துக்கு செல்ல பாதை கேட்டு, சடலத்துடன் உறவினர்கள் 4 மணி நேரம் போராட்டத்தில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மயானத்துக்கு பாதை கோரி இறந்த உடலுடன் 4 மணி நேரம் போராட்டம் : நிரந்தர மயானம் மற்றும் பாதை ஏற்படுத்த வட்டாட்சியர் உறுதி
x
பொட்டியபுரம் ஊராட்சி காட்டுவளவு பகுதியைச் சேர்ந்த 55 வயதான சின்னசாமி என்ற கூலித் தொழிலாளி காலமானார். அவரது உடல் இறுதிச் சடங்கு செய்வதற்காக மயானத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது. ஆனால், ஊர்வலத்தை இடைமறித்த அதே பகுதியை சேர்ந்த இருவர், தங்களது பட்டா நிலம் வழியே செல்ல எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், சடலத்தை அங்கேயே வைத்த உறவினர்கள், மயானத்துக்கு செல்ல பாதை கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்த  போலீசார் மற்றும் வட்டாட்சியர் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். விரைவில் நிரந்தர மயானமும், பாதையும் ஏற்படுத்தி தருவதாக வட்டாட்சியர் உறுதி அளித்தார். இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது

Next Story

மேலும் செய்திகள்