ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்க தடை - உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க, உச்ச நீதிமன்றம் தடை விதித்து அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தேசிய பசுமைத் தீர்ப்பாயம் கடந்த டிசம்பர் மாதம் உத்தரவிட்டதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில், தமிழக அரசு மேல்முறையீட்டு மனுத்தாக்கல் செய்தது. இந்த மனு மீது, உச்சநீதிமன்ற நீதிபதிகள் ரோஹிண்டன் பாலி நாரிமன் மற்றும் வினீத் சரண் அமர்வு முன்பு விசாரணை நடைபெற்றது. இருதரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில், ஆலையை மீண்டும் திறக்கத் தடை விதித்து, நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் சம்பந்தப்படட வேதாந்தா நிறுவனம், சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகுமாறும் தீர்ப்பளித்தது. தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்யும் அதிகாரம் பசுமை தீர்ப்பாயத்துக்கு இல்லை எனவும் , உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
"தன் வாழ்க்கையிலேயே மகிழ்ச்சியான நாள்" - வைகோ
உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தன் வாழ்க்கையிலேயே மகிழ்ச்சியான நாள் எனக் குறிப்பிட்டார்.
"உச்சநீதிமன்ற தீர்ப்பை ஏற்றுக்கொள்கிறேன்" - , வேதாந்தா நிறுவன தலைமை செயல் அதிகாரி
ஸ்டெர்லைட் வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்றுகொள்வததாகவும், உத்தரவுப்படி சென்னை உயர்நீதிமன்றத்தை விரைவில் நாட இருப்பதாகவும், வேதாந்தா நிறுவன தலைமை செயல் அதிகாரி ராம்நாத் தெரிவித்தார்.
பூவுலகின் நண்பர்கள் சுந்தர்ராஜனின் கருத்து
ஸ்டெர்லைட் ஆலையின் அடுத்த நகர்வு எப்படி இருக்கும்? - தமிழக அரசு வழக்கறிஞர் பதில்
Next Story