வீட்டை ஜப்தி செய்ய நோட்டீஸ் ஒட்டியதால் வருத்தம் : 2 பேர் தற்கொலை

வங்கியில் கடன் வாங்கி கட்டிய வீட்டை ஜப்தி செய்ய நோட்டீஸ் வந்ததால் 3 பேர் தற்கொலைக்கு முயற்சி செய்ததில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
வீட்டை ஜப்தி செய்ய நோட்டீஸ் ஒட்டியதால் வருத்தம் : 2 பேர் தற்கொலை
x
வங்கியில் கடன் வாங்கி கட்டிய வீட்டை ஜப்தி செய்ய நோட்டீஸ் வந்ததால் 3 பேர் தற்கொலைக்கு முயற்சி செய்ததில் இருவர் உயிரிழந்துள்ளனர். சென்னை, பெரம்பூர் லோகோ ஒர்க்ஸ் சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் பிரகாஷ், அவரின் வளர்ப்பு தந்தை முரளிதரன், முரளிதரனின் நண்பர்  ரஞ்சித் ஆகியோர் வாயில் நுரை தள்ளியபடி மயங்கி கிடந்துள்ளனர். 

இதைக் கண்ட வீட்டு  வேலைக்கார பெண், பெரவள்ளுர் போலீசுக்கு தகவல் கொடுத்துள்ளார்.  போலீசார் அவர்களை மீட்டு, சோதனை செய்தபோது, 64 வயதான முரளிதரனும், 52 வயதான ரஞ்சித்தும் உயிரிழந்திருப்பது தெரியவந்தது. 42 வயதான பிரகாஷ் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதும் தெரியவந்தது. இதனையடுத்து  பிரகாஷை சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்த போலீசார், முரளிதரன் மற்றும் ரஞ்சித் உடலை பிரேத பரிசோதனைக்கு கீழ்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மருத்துவக் காப்பீடு நிறுவனம் ஒன்றில் பணியாற்றிய பிரகாஷ், வங்கியில் கடன் வாங்கி வீடு கட்டி இருந்தார். கடன் தொலையை திருப்பி செலுத்தாததால், அடுக்குமாடி குடியிருப்பு வீட்டை ஜப்தி செய்ய வங்கி நோட்டீஸ் ஒட்டியதே தற்கொலைக்கு காரணம் என போலீசாருக்கு தெரியவந்துள்ளது. ஆனாதையான பிரகாஷை, முரளிதரன் எடுத்து வளர்த்துள்ளார். சொந்த மகன் வில்லிவாக்கத்தில் தனியாக வசித்து வரும் நிலையில், முரளிதரன் தனது மனைவியுடன்  வளர்ப்பு மகன் பிரகாஷ் வங்கியில் கடன் வாங்கி பெரம்பூர் லோகோ ஒர்க்ஸ் சாலையில் கட்டிய வீட்டில் வசித்து வந்துள்ளார். 

பிரகாஷ் சிலரிடம் கடன் வாங்கி திருப்பி கொடுக்கவில்லை என கூறப்படுகிறது. இது குறித்து கடன் கொடுத்தவர்கள் காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுத்ததால், விசாரணை காரணமாக பிரகாஷ் தனது வேலையை இழந்ததாக கூறப்படுகிறது. கடந்த 6 மாதம் வேலை இல்லாமல் இருந்த நிலையில் அடுக்குமாடி குடியிருப்பு வீட்டை ஜப்தி செய்ய நோட்டீஸ் வந்தது கண்டு பிரகாஷ் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

வளர்ப்பு தந்தை முரளிதரன் மற்றும் அவரின் நண்பர்  ரஞ்சித் ஆகியோருடன் சேர்ந்து பிரகாஷ் அளவுக்கு அதிகமான தூக்க மாத்திரைகள் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளனர். இதில் 2 பேர் உயிரிழந்த நிலையில் பிரகாஷ் கவலைக்கிடமான நிலையில் இருக்கிறார். அவருக்கு சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

வருமானத்தை மீறி, செலவு செய்து ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்ததன் விளைவால் இந்த தற்கொலை சம்பவம் நடந்துள்ளது. வருமானம் ஈட்டுவதிலும்,  செலவும் செய்வதிலும் சரியான திட்டமிடல் இல்லாவிட்டால் வாழ்வு பரிதாபமாகிவிடும் என்பதற்கு பிரகாஷின் வாழ்வு பாடமாகிறது. 

Next Story

மேலும் செய்திகள்