ஏழை தொழிலாளர் குடும்பங்களுக்கு ரூ.2000 சிறப்பு நிதியுதவி - வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு
ஏழை தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு ஒரு முறை சிறப்பு நிதியுதவி இரண்டாயிரம் ரூபாய் வழங்குவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்படுள்ளது
ஏழை தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு ஒரு முறை சிறப்பு நிதியுதவி இரண்டாயிரம் ரூபாய் வழங்குவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்படுள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், மாவட்ட அளவில், ஆட்சியரை தலைவராக கொண்ட 7 பேர் குழுவும், சென்னை மாநகராட்சியில், ஆணையரை தலைவராக கொண்ட 6 பேர் குழுவும் அமைக்கப்பட வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஊரக பகுதிகளில், திட்ட இயக்குனர் மகளிர் திட்டம் மூலமாக பயனாளிகள் வங்கி கணக்குகளுக்கு நேரடியாக மின்னணு பண பரிவர்த்தனை மூலம் அனுப்பி வைக்கப்படும் என்றும், நகர்புறத்தில் சம்பந்தப்பட்ட நகர்புற உள்ளாட்சி அமைப்புகள் மூலமாக பயனாளிகள் வங்கி கணக்கிற்கு மின்னணு பரிவர்த்தனை முறையில் அனுப்பிவைக்கப்படும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
Next Story