லஞ்சம் - நகர் ஊரமைப்பு உதவி இயக்குனர் கைது, காரில் இருந்த ரூ.1.06 லட்சம் பறிமுதல்
நகர் ஊரமைப்பு உதவி இயக்குனர் லோகேஷை லஞ்ச ஒழிப்புத்துறை கைது செய்தனர்
சென்னையை சேர்ந்த ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் ஜெயராமன் என்பவர், திண்டிவனம் பகுதியில் உள்ள 120 வீட்டு மனைகளுக்கு அனுமதி வழங்குவது தொடர்பாக விழுப்புரம் மண்டல நகர் ஊரமைப்பு உதவி இயக்குனர் லோகேஷை அணுகியுள்ளார். அதற்கு லோகேஷ் 2 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளதாக தெரிகிறது. இதனையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளிடம் ஜெயராமன் புகார் தெரிவித்துள்ளார்.
அவர்களின் ஆலோசனைபடி, ஜெயராமன் கொடுத்த 30 ஆயிரம் ரூபாய் பணத்தை லோகேஷ் வாங்கிய போது போலீசார் கையுடம் களவுமாக அவரை கைது செய்தனர். மேலும் அவருடைய காரில் இருந்த 1 லட்சத்து 6 ஆயிரம் ரூபாய் பணத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
Next Story