கூட்டுறவு தேர்தலை ஏன் டிஜிட்டல் முறையில் நடத்த கூடாது?
கூட்டுறவு சங்க தேர்தலில் அதிக முறைகேடுகள் நடப்பதால் அதனை ஏன் டிஜிட்டல் முறையில் நடத்தக் கூடாது என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
கூட்டுறவு சங்க தேர்தலில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதாகவும், எந்த வித வெளிப்படை தன்மையும் இல்லை என்பதால் அதனை முறையாக நடத்த உத்தரவிடக் கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் நீதிபதிகள் கிருபாகரன், சுந்தர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது கூட்டுறவு தேர்தல் முறைகேடு தொடர்பாக அதிக அளவில் மனுக்கள் வருவதாக கூறிய நீதிபதிகள், தேர்தல் மற்றும் மனு தாக்கலை முற்றிலும் டிஜிட்டல் முறையில் ஏன் நடத்த கூடாது என கேள்வி எழுப்பினர். இது குறித்து மாநில கூட்டுறவு தேர்தல் நடத்தும் ஆணையர் நேரில் ஆஜராகி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் கூறிய நீதிபதிகள், வழக்கு விசாரணையை பிப்ரவரி 19 ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.
Next Story