துணை மின் நிலையங்களை அமைக்க வனத்துறை நிலங்களை பெறுவது மிகவும் கடினமாக இருக்கிறது - அமைச்சர் தங்கமணி
மின் அலுவலகங்கள் மற்றும் துணை மின் நிலையங்களை அமைப்பதற்காக வனத்துறை நிலங்களை பெறுவது மிகவும் கடினமாக இருப்பதாக சட்டப்பேரவையில் மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்தார்.
மின் அலுவலகங்கள் மற்றும் துணை மின் நிலையங்களை அமைப்பதற்காக வனத்துறை நிலங்களை பெறுவது மிகவும் கடினமாக இருப்பதாக சட்டப்பேரவையில் மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்தார். பேரவையில் காங்கிரஸ் உறுப்பினர் விஜயதரணி, திமுக உறுப்பினர் முருகன் ஆகியோர் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த மின்துறை அமைச்சர் தங்கமணி, துணை மின் நிலையங்களை அமைக்கவும், மின் அலுவலகங்கள் கட்டவும் பலரும் கோரிக்கை விடுத்து வருவதாகவும், ஆனால் அதற்கான நிலங்களை பெறுவதில் சிக்கல்கள் இருப்பதாக தெரிவித்தார். எனினும் வனத்துறையின் அனுமதி பெற்று தேவையான இடங்களில் மின் அலுவலகங்கள் மற்றும் துணை மின் நிலையங்களை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
Next Story