சின்னதம்பியை விரட்ட புதிய கும்கி யானை - கும்கி யானைகள் மிரண்டு ஒடியதால் முடிவு

திருப்பூர் மாவட்டம் உடுமலை பகுதியில் முகாமிட்டுள்ள சின்னதம்பியை விரட்ட புதிய கும்கி யானையை வரவழைக்க வனத்துறையினர் ஏற்பாடு செய்துள்ளனர்.
சின்னதம்பியை விரட்ட புதிய கும்கி யானை - கும்கி யானைகள் மிரண்டு ஒடியதால் முடிவு
x
திருப்பூர் மாவட்டம் உடுமலை பகுதியில் முகாமிட்டுள்ள சின்னதம்பியை விரட்ட புதிய கும்கி யானையை வரவழைக்க வனத்துறையினர் ஏற்பாடு செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டம் உடுமலை பகுதியில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக முகாமிட்டுள்ள சின்னதம்பி யானை தற்போது கண்ணாடிபுத்தூர் பகுதியில் சுற்றி திரிகிறது. தோட்டங்களில் புகுந்து கரும்பு, வாழையை தின்று வரும் சின்னதம்பியை விரட்ட கலீம், மாரியப்பன் என்ற 2 கும்கி யானைகள் மூலம்  முயற்சி மேற்கொண்ட நிலையில், நேற்று கும்கி யானைகளை பார்த்து  கரும்பு தோட்டத்தில் சின்னத்தம்பி ஓடியது. இதனால் மிரண்ட கும்கி யானை மாரியப்பன் எதிர் திசையில் ஓடியது. அதை தொடர்ந்து கலீமும் ஓடியது. 

மிரண்டு ஓடிய கும்கி யானைகளை பாகன்கள் சிறிது தூரம் ஓட ஓட விட்டு தண்ணீரில் குளிப்பாட்டி சாந்தப்படுத்தினர். கலீமுடன் நட்புடன் பழகும் சின்னத்தம்பி, மாரியப்பனை பார்த்து வெளியே வர மறுக்கிறது. இதனால், மாரியப்பன் சொந்த ஊருக்கு அனுப்பப்பட்டது. தற்போது, கலீம் மட்டுமே உள்ள நிலையில் சின்னதம்பியை விரட்ட, புதிய கும்கி யானையை வரவழைக்க வனத்துறையினர் ஏற்பாடு செய்துள்ளனர்.



Next Story

மேலும் செய்திகள்