கடன் பெற்று தருவதாக கூறி நூதன மோசடி : இருவர் கைது...

நாகை மற்றும் திருவாரூர் மாவட்ட புயல் பாதித்த பகுதிகளில் பிரதமர் பெயரை கூறி மோசடியில் ஈடுபட்ட கும்பலை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடன் பெற்று தருவதாக கூறி நூதன மோசடி : இருவர் கைது...
x
நாகை மற்றும் திருவாரூர் மாவட்ட புயல் பாதித்த பகுதிகளில் மத்திய அரசின் திட்டத்தில் 50 ஆயிரம் ரூபாய் கடனுதவி வழங்கவுள்ளதாக மர்ம கும்பல் ஒன்று தகவல் பரப்பியுள்ளது. இதில் 25 ரூபாய் மத்திய அரசு மானியமாக அளிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதற்கான  விண்ணப்பங்களை நாகை பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் விடுதியில் போலி தனியார் நிறுவன ஏஜென்டுகள் 3 நாட்களாக வழங்கி வந்துள்ளனர். இந்த விண்ணப்பங்களை பெற இன்று இறுதி நாள் என தகவல் பரவியைதையடுத்து  கீழ்வேளூர், வேதாரண்யம், புதுப்பள்ளி, மயிலாடுதுறை, சீர்காழி உள்ளிட்ட பலவேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர் விண்ணப்ப கட்டணமான 100 ரூபாயுடன் தனியார் விடுதி முன்பு குவிந்தனர்.  இதுதொடர்பான தவலின் பேரில் அங்கு சென்ற போலீசார் வசூலில் ஈடுபட்ட மன்னார்குடியைச் சேர்ந்த வனிதா,மற்றும் கார்த்திகேயன் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 


Next Story

மேலும் செய்திகள்