கஞ்சா பதுக்கிவைத்த ஓய்வுபெற்ற வட்டாட்சியர் கைது

கஞ்சா பதுக்கி வைத்து விட்டு கடத்தல்காரர்களை சுமார் 9 மணி நேரமாக போலீஸாருடன் இணைந்து தேடிய ஓய்வு பெற்ற வட்டாட்சியர் பிடிபட்டார்.
கஞ்சா பதுக்கிவைத்த ஓய்வுபெற்ற வட்டாட்சியர் கைது
x
ராமநாதபுரம் மாவட்டம், அரியமான் கடற்கரை பகுதியில் இருந்து இலங்கைக்கு கடத்துவதற்காக வைத்திருந்த  196 கிலோ கஞ்சாவை போலீசார் கைப்பற்றினர். ஆனால், கடத்தல்காரர் சிக்காததால், உளவுத்துறை, காவல்துறை மற்றும் பாதுகாப்பு வட்டார அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர். அவர்களுடன் சேர்ந்து கடத்தல்காரரை தேடிய தோட்டத்தின் உரிமையாளர் ஜெயக்குமார் தான் கடத்தல்காரர் என தெரிந்ததும் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். முத்துபேட்டை பகுதியில் வசித்து வரும் ஜெயகுமார்,  வட்டாட்சியராக பணியாற்றி ஓய்வு பெற்றார். அவரை உச்சிபுளி காவல் நிலைத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தியபோது இலங்கைக்கு கஞ்சா கடத்துவதற்காக தோட்டத்தில் பதுக்கி வைத்திருந்ததை அவர் ஒத்துக்கொண்டார். இதையடுத்து, ஜெயகுமாரை கைது செய்த உச்சிபுளி போலீஸார் போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். 

Next Story

மேலும் செய்திகள்