கடும் வறட்சியால் விலங்குகள் பரிதவிப்பு : தாகம் தீர்க்க நீர்தேடி அலையும் யானைகள்

முதுமலையில் நிலவும் கடும் வறட்சி காரணமாக யானை உள்ளிட்ட வனவிலங்குகள் உணவு மற்றும், தண்ணீரின்றி பரிதவிக்கின்றன.
கடும் வறட்சியால் விலங்குகள் பரிதவிப்பு : தாகம் தீர்க்க நீர்தேடி அலையும் யானைகள்
x
321 சதுர கிலோ மீட்டர் பரப்பில் அடர்ந்த வனப் பகுதியான முதுமலையில் யானை, புலி, மான் உள்பட பல்வேறு விலங்குகளும் பறவைகளும் உள்ளன. போதிய பருவமழை இல்லாததால், வனப்பகுதி முழுவதும் வறட்சியின் கோரப்பிடியில் சிக்கியுள்ளது. விலங்குகள் இரை, தண்ணீரை தேடி அலையும் நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து வனப்பகுதியில் உள்ள நீர்தொட்டிகளில் தண்ணீர் நிரப்பப்படுகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வனப்பகுதியை சுற்றி சுமார் 50 கிலோமீட்டர் தூரத்தில் தீ தடுப்பு கோடுகள் அமைக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்