சின்னதம்பி யானையை வனப்பகுதிக்குள் விடக்கோரி விவசாயிகள் சாலைமறியல்
சின்னதம்பி யானையை வனப்பகுதிக்குள் அனுப்ப கோரி விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே கிருஷ்ணாபுரம் பகுதியில் முகாமிட்டிருந்த சின்னதம்பி யானையானது 7 நாட்களாக இருந்த இடத்தை விட்டு தற்போது கிருஷ்ணாபுரம் வாய்க்கால் பாலம் அருகே வந்துள்ளது. இரவு நேரத்தில் கரும்பு தோட்டத்திற்குள் சின்னதம்பி யானை சுற்றி வருவதால் கரும்பு விவசாயம் பாதிக்கப்படுவதாகவும், வயலுக்கு தண்ணீர் பாய்ச்சுவதில் சிரமம் இருப்பதாகவும் கூறப்படுகிறது. எனவே உடனடியாக சின்னத்தம்பி யானையை வனப்பகுதிக்குள் கொண்டு செல்ல வலியுறுத்தி ஏராளமான கரும்பு விவசாயிகள் உடுமலை - பழநி தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் கடும் போக்குவரத்து பாதிப்பு நிலவியது. தகவலறிந்து வந்த போலீசார், விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
Next Story