அரசுப் பேருந்து மோதி கை கால்கள் ஊனம் : இழப்பீடு வழங்காததால் பேருந்து ஜப்தி...

அரசுப் பேருந்து மோதி, ஊனமடைந்தவருக்கு இழப்பீடு வழங்காததால் பேருந்து ஜப்தி செய்யப்பட்டுள்ளது.
அரசுப் பேருந்து மோதி கை கால்கள் ஊனம் : இழப்பீடு வழங்காததால் பேருந்து ஜப்தி...
x
அரசுப் பேருந்து மோதி, ஊனமடைந்தவருக்கு இழப்பீடு வழங்காததால் பேருந்து ஜப்தி செய்யப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டம், கொணவட்டத்தை சேர்ந்த அம்ஜத், இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த போது அரசுப் பேருந்து மோதியதில் கை கால்கள் ஊனமடைந்தார். இது தொடர்பாக  நடைபெற்ற வழக்கில், அம்ஜத்துக்கு  4 லட்சத்து 67 ஆயிரம் ரூபாய் இழப்பீட்டுத் தொகை வழங்க போக்குவரத்து கழகத்துக்கு கூடுதல் மாவட்ட அமர்வு  நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் இழப்பீட்டுத் தொகை வழங்கவில்லை என்பதால்  பேருந்தை ஜப்தி செய்ய நீதிமன்றம் சமீபத்தில்  ஆணையிட்டதைத் தொடர்ந்து,  வேலூர் புதிய பேருந்து நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த அரசு பேருந்தை  நீதிமன்ற ஊழியர்கள் ஜப்தி செய்து எடுத்து சென்றனர்.  இந்த சம்பவத்தால் பேருந்து நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்