ஃபேஸ்புக்கில் மலர்ந்த காதல் - காவல் நிலையத்தில் காதல் ஜோடிக்கு திருமணம்

காஞ்சிபுரம் மாவட்டம், செங்கல்பட்டு அடுத்த மறைமலை நகர் காவல் நிலையத்தில், ஃபேஸ்புக் காதலர்களுக்கு திருமணம் நடைபெற்றது.
ஃபேஸ்புக்கில் மலர்ந்த காதல் - காவல் நிலையத்தில் காதல் ஜோடிக்கு  திருமணம்
x
காஞ்சிபுரம் மாவட்டம்,  செங்கல்பட்டு அடுத்த மறைமலை நகர் காவல் நிலையத்தில், ஃபேஸ்புக் காதலர்களுக்கு திருமணம் நடைபெற்றது. மறைமலை நகர் அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த மாயக்கண்ணனும், பெங்களூர் பொம்மநெல்லியை சேர்ந்த உஷா என்பவரும், கடந்த ஆறு ஆண்டுகளாக ஃபேஸ்புக் மூலம் காதலித்து வந்துள்ளனர். இவர்களின் திருமணத்திற்கு இருவீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்ததால், காதல் ஜோடி காவல்நிலையத்தில் தஞ்சமடைந்தனர். இருவீட்டு பெற்றோரையும் அழைத்து சமரசம் பேசிய காவல்நிலைய ஆய்வாளர் நந்தகுமார், அவரது தலைமையில் காதல் ஜோடிக்கு திருமணம் இன்று நடத்தி வைத்தார்.

Next Story

மேலும் செய்திகள்