தேசிய பெண் குழந்தை தினம் : ஒரு லட்சம் பரிசுத் தொகை வழங்கிய முதல்வர்
தேசிய பெண் குழந்தை தினத்தை முன்னிட்டு சமூக முன்னேற்றத்திற்கு சிறப்பாக பணியாற்றிய கரூர் மாவட்டத்தை சேர்ந்த ரக்சனா என்ற பெண்ணுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்.
தேசிய பெண் குழந்தை தினத்தை முன்னிட்டு சமூக முன்னேற்றத்திற்கு சிறப்பாக பணியாற்றிய கரூர் மாவட்டத்தை சேர்ந்த ரக்சனா என்ற பெண்ணுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார். சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காசோலை வழங்கப்பட்டது. மரக்கன்று நட நன்கொடை வழங்கியது, உடல் உறுப்பு தான விழிப்புணர்வு போன்ற பணிகளுக்காக அவருக்கு இந்த பரிசுத் தொகை வழங்கப்பட்டது. கடந்த 24ஆம் தேதி டெல்லியில் நடந்த விழாவில் தமிழகத்திற்கு வழங்கப்பட்ட தேசிய விருதை முதலமைச்சர் பழனிசாமியிடம் அதிகாரிகள் வழங்கி வாழ்த்து பெற்றனர்.
Next Story