முகவரியில்லாமல் தவிக்கும் நரிக்குறவர்கள் - அங்கீகாரம் கிடைக்குமா?
தூத்துக்குடி புதிய பேருந்த நிலையம் அருகே வசிக்கும் நரிக்குறவர் சமூகத்தினர் அடிப்படை வசதி மற்றும் முகவரியில்லாமல் தவித்து வருகின்றனர்.
தூத்துக்குடி புதிய பேருந்த நிலையம் அருகே வசிக்கும் நரிக்குறவர் சமூகத்தினர் அடிப்படை வசதி மற்றும் முகவரியில்லாமல் தவித்து வருகின்றனர். கடந்த 40 ஆண்டுகளாக இந்த பகுதியில் வசித்து வரும் தங்களுக்கு, இதுவரை குடும்ப அட்டை, சாதி சான்றிதழ், வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட எந்த அடிப்படை உரிமைகளும் கிடைக்கவில்லை என புகார் கூறுகின்றனர். தங்களுக்கு வழங்கப்பட்ட இருப்பிடத்திலும் வசிக்க முடியாத சூழல் நிலவுவதாக குற்றம் சாட்டிய நரிக் குறவர்கள், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் இது குறித்து முறையிட்டும், மனு அளித்தும் பலனில்லை என வேதனை தெரிவிக்கின்றனர். நாடோடியாக திரிந்து, தற்போது 40 ஆண்டுகளாக முகவரியில்லாமல் தவிக்கும் தங்களுக்கு, உரிய சமூக அடையாளத்தை அரசு வழங்க வேண்டும் என்பதே அவர்களின் கோரிக்கையாகும்.
Next Story