அண்ணாமலை பல்கலை. ஊழியர்கள் பணி இடமாற்றம் : பல்கலைக்கழக பணிக்கே திரும்ப அழைக்க ஊழியர்கள் கோரிக்கை
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் இருந்து தமிழகம் முழுவதும் பல்வேறு அரசு துறைகளுக்கு பணி இடமாற்றம் செய்யப்பட்ட ஊழியர்கள் சுமார் 500 பேர் இன்று துணைவேந்தரை சந்திக்க ஊர்வலமாக சென்றனர்.
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் இருந்து தமிழகம் முழுவதும் பல்வேறு அரசு துறைகளுக்கு பணி இடமாற்றம் செய்யப்பட்ட ஊழியர்கள் சுமார் 500 பேர் இன்று துணைவேந்தரை சந்திக்க ஊர்வலமாக சென்றனர். துணைவேந்தர் அறை காவலாளிகள் அவர்களை தடுத்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் துணைவேந்தர் முருகேசனை சந்தித்த அவர்கள், பணி இடமாற்றம் செய்யப்பட்டதால். மன அழுத்ததில் இருப்பதாக வேதனை தெரிவித்தனர். பல்கலைக்கழக பணிக்கே திரும்ப அழைக்க வேண்டும் என வலியுறுத்தி அவரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
Next Story