ரூ14.5 கோடி செலவில் புதிய மருத்துவ வசதிகளை திறந்து வைத்தார் அமைச்சர் விஜயபாஸ்கர்
வேலூரில் 14 கோடியே 50 லட்சம் ரூபாய் செலவில் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு உள்ளிட்ட மருத்துவ சேவை வசதிகளை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் திறந்து வைத்தார்.
வேலூரில் 14 கோடியே 50 லட்சம் ரூபாய் செலவில் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு உள்ளிட்ட மருத்துவ சேவை வசதிகளை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் திறந்து வைத்தார். அங்குள்ள அடுக்கம்பாறையில் அரசு தலைமை மருத்துவமனையில் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு, விரிவாக்கம் செய்யப்பட்ட சிறுநீரக சுத்திகரிப்பு பிரிவு, மற்றும் ரத்த நோய்கள் ஆய்வகம் ஆகியவற்றை அவர் திறந்து வைத்தார். இந்த விழாவில், அமைச்சர்கள் வீரமணி மற்றும் நிலோபர் கபில் மற்றும் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்றனர்.
Next Story