தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து வரும் மார்ச் 10ஆம் தேதி வழங்கப்படும் - விஜயபாஸ்கர்
தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து வரும் மார்ச் 10ஆம் தேதி வழங்கப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து வரும் மார்ச் 10ஆம் தேதி வழங்கப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் நடைபெற்ற பயிலரங்கிற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர் இவ்வாறு கூறினார். கடந்த 14 ஆண்டுகளாக போலியோ இல்லாத மாநிலமாக தமிழகம் விளங்குவதாக கூறிய அமைச்சர் விஜயபாஸ்கர் இந்த ஆண்டு ஒரே தவணையாக போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும் என்று தெரிவித்தார். உலக வங்கி மூலம் தமிழக சுகாதாரத்துறைக்கு 2 ஆயிரத்து 645 கோடி ரூபாய் கிடைக்கும் வகையில் வரும் திங்கட்கிழமை ஒப்பந்தம் மேற்கொள்ள உள்ளதாக தெரிவித்தார்.
Next Story