காவலர்கள் திட்டியதால் கால்டாக்ஸி ஓட்டுனர் தற்கொலை - கால்டாக்ஸி ஓட்டுநர்கள் முற்றுகை
சென்னையில் போக்குவரத்து காவலர்கள் திட்டியதால் மனமுடைந்து கால்டாக்சி ஓட்டுனர் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில், இணை காவல் ஆணையர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
சென்னையில் போக்குவரத்து காவலர்கள் திட்டியதால் மனமுடைந்து கால்டாக்சி ஓட்டுனர் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில், இணை காவல் ஆணையர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. கால்டாக்ஸி ஓட்டுனர் ராஜேஷ், மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியரை அழைத்துச் செல்வதற்காக பாடி அருகே காரை நிறுத்தியுள்ளார். அப்போது, அங்கு வந்த காவலர்கள் ராஜேஷை, தரக்குறைவாக திட்டி காரை சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த ராஜேஷ், மறைமலைநகர் அருகே ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக சென்னை மேற்கு காவல் இணை ஆணையர் விஜயகுமாரி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. முன்னதாக ராஜேஷ்
வீடியோவில் குறிப்பிட்ட அண்ணா நகர், திருவொற்றியூர் பகுதி போக்குவரத்து காவலர்கள் யார் என கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது.
இதற்கு நியாயம் கேட்டு நூற்றுக்கணக்கான வாகன ஓட்டுனர்கள் திருமங்கலம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
ஓட்டுனர் தற்கொலை - மனித உரிமை ஆணையம் வழக்கு
கால்டாக்சி ஓட்டுனர் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தை அடுத்து, தாமாக முன்வந்து மாநில மனித உரிமை ஆணையம் வழக்குப் பதிவு செய்துள்ளது. இதையடுத்து, சென்னை மாநகர காவல் ஆணையர் 4 வாரத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்ய ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
Next Story