தமிழகத்தில் மொத்த வாக்காளர்கள் 5.91 கோடி பேர் - தமிழக தலைமை தேர்தல் அதிகாரி
தமிழகத்தில் 2019ஆம் ஆண்டின் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.
தமிழகத்தில் 2019ஆம் ஆண்டின் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இந்த பட்டியலை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூ வெளியிட்டார்.
தமிழகத்தை பொறுத்தவரை 2 கோடியே 92 லட்சம் ஆண் வாக்காளர்கள், 2 கோடியே 98 லட்சம் பெண் வாக்காளர்கள், மூன்றாம் பாலினத்தவர் 5 ஆயிரத்து 472 பேர் என மொத்தம் 5 கோடியே 91 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர்.
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தலுக்காக விண்ணப்பித்த13 லட்சத்து 96 ஆயிரத்து 326 பேரின் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டு பெயர்கள் சேர்க்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இடப்பெயர்ச்சி, இறப்பு மற்றும் இரட்டைப் பதிவு ஆகிய காரணங்களால் 5 லட்சத்து 62 ஆயிரத்து 937 பெயர்கள் நீக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 18 வயது முதல் 19 வயது வரை 8 லட்சத்து 98 ஆயிரத்து 759 வாக்காளர்கள் உள்ளதாகவும், 80 வயதுக்கு மேல் ஒரு லட்சத்து 12 ஆயிரத்து 200 வாக்காளர்கள் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்திலேயே அதிக அளவு வாக்காளர்கள் கொண்ட தொகுதியாக காஞ்சிபுரம் மாவட்டம் சோழிங்க நல்லூர் தொகுதி உள்ளது. இதில் மொத்தம் 6 லட்சத்து 18 ஆயிரத்து 695 வாக்காளர்கள் உள்ளனர்.
தமிழ்நாட்டிலேயே குறைந்த அளவு வாக்காளர்கள் கொண்ட தொகுதியாக சென்னை மாவட்டத்தில் உள்ள துறைமுகம் தொகுதி உள்ளது. இங்கு 1 லட்சத்து 66 ஆயிரத்து 515 வாக்காளர்கள் உள்ளனர்.
மேலும் 18 வயது நிரம்பியவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க அடுத்த அறிவிப்பு வரும் வரை வாக்காளர் பதிவு அதிகாரி அலுவலகம் மற்றும் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story