பிச்சை எடுத்து கல்விக்கு உதவும் முதியவர் - நெகிழ வைக்கும் மனிதநேயம்
சிவகங்கையில் முதியவர் ஒருவர் பிச்சை எடுக்கும் பணத்தில் பள்ளிக் குழந்தைகளின் கல்விக்கு உதவி செய்து மனிதநேயத்துடன் வாழ்ந்து வருகிறார்
சிவகங்கையில் முதியவர் ஒருவர் பிச்சை எடுக்கும் பணத்தில் பள்ளிக் குழந்தைகளின் கல்விக்கு உதவி செய்து மனிதநேயத்துடன் வாழ்ந்து வருகிறார். பிச்சை புகினும் கற்றல் நன்றே என்பது அவ்வையாரின் வாக்கு. இதற்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டாக உள்ளார் தூத்துக்குடி மாவட்டம் ஆலங்கிணறு பகுதியை சேர்ந்த பாண்டியன். 66 வயதான இவர், மனைவி இறந்து மகன் கைவிடப்பட்ட நிலையில், பிச்சை எடுக்கும் தொழிலுக்கு தள்ளப்பட்டுள்ளார். தனது நிலையை நினைத்து வருந்திய முதியவர், தான் சம்பாதிக்கும் பணத்தைக் கொண்டு மாணவர்களின் கல்விக்கு உதவி செய்ய வேண்டும் என முடிவு செய்துள்ளார். தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களுக்கு சென்று பிச்சை எடுத்து, அதில் கிடைக்கும் வருவாயைக் கொண்டு, கிராமப்புற பள்ளிகளுக்கு சென்று மாணவர்களுக்கு தேவையான பொருட்களை வழங்கி வருகிறார். கடந்த 25 ஆண்டுகளில் சுமார் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் கல்வி உதவி செய்திருப்பதாக முதியவர் பெருமிதம் தெரிவிக்கிறார். கல்விக்கு உதவும் பிச்சைக்காரரின் மனிதநேயம் அனைவரையும் நெகிழ வைக்கிறது.
Next Story