திரையரங்குகளில் வாகன நிறுத்த கட்டணம் நிர்ணயித்த அரசாணை முழுமையாக அமல்படுத்தப்படுகிறதா? - உயர்நீதிமன்றம்

திரையரங்குகளில் வாகன நிறுத்த கட்டணம் நிர்ணயித்த அரசாணை முழுமையாக அமல்படுத்தப்படுகிறதா என விளக்கமளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திரையரங்குகளில் வாகன நிறுத்த கட்டணம் நிர்ணயித்த அரசாணை முழுமையாக அமல்படுத்தப்படுகிறதா? - உயர்நீதிமன்றம்
x
தமிழகத்தில் வணிக வளாகங்கள் மற்றும் திரையரங்குகளில் அரசு நிர்ணயித்ததை விட கூடுதல் வாகன கட்டணம் வசூலிக்கப்படுவதாக கூறி, வழக்கறிஞர் எஸ்.நடராஜன் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு, நீதிபதிகள் சத்யநாராயணன் மற்றும் ராஜமாணிக்கம் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. 

அப்போது திரையரங்கு நுழைவு வாயில்களில் சோதனை என்ற பெயரில் உடலைத் தொட்டு சோதனை செய்வதற்கு பதிலாக, மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை முறையை அமல்படுத்த வேண்டும் எனவும் மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. இதையடுத்து, திரையரங்குகளில் வாகன நிறுத்தம் தொடர்பான அரசாணை எவ்வாறு அமல்படுத்தப்படுகிறது என  விளக்கமளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை  4 வாரத்திற்கு தள்ளி வைத்தனர். 

Next Story

மேலும் செய்திகள்