அரசுப் பள்ளியில் அதிநவீன ரோபோ ஆய்வகம்
தமிழகத்திலேயே முதன் முறையாக மதுரை மாவட்டம் தத்தனேரியில் உள்ள திரு.வி.க. அரசு மேல்நிலைப் பள்ளியில், ரோபோடிக் ஆய்வகம் திறக்கப்பட்டுள்ளது.
தமிழகத்திலேயே முதன் முறையாக மதுரை மாவட்டம் தத்தனேரியில் உள்ள திரு.வி.க. அரசு மேல்நிலைப் பள்ளியில், ரோபோடிக் ஆய்வகம் திறக்கப்பட்டுள்ளது. இந்தோ - அமெரிக்க ஒருங்கிணைப்பு தனியார் நிறுவனம் ஒன்றோடு இணைந்து மதுரை மாநகராட்சி சார்பில், பதிமூன்றரை லட்சம் ரூபாயில், இந்த ஆய்வகம் அமைக்கப்பட்டுள்ளது. திறப்பு விழாவில், ரிப்பன் வெட்டும் கத்தரிகோலை, மாணவர்கள் உருவாக்கிய ரோபோ எடுத்து வந்தது. அரசு பள்ளி மாணவர்களின் ஆர்வமும், வேகமும் தங்களை ஊக்கப்படுத்தியிருப்பதாக தெரிவித்துள்ள தனியார் நிறுவனத்தினர், மேலும், அரசுப் பள்ளிகளில் ஆய்வகங்களை அமைக்கவுள்ளதாக கூறினர்.
Next Story