சிறுபான்மை பள்ளிகளுக்கு எதிரான தமிழக அரசின் அரசாணை ரத்து

50 சதவீத சிறுபான்மையினர் மாணவர்களை சேர்க்கும் பள்ளிகளுக்கே சிறுபான்மை அந்தஸ்து வழங்கப்படும் என்ற தமிழக அரசின் அரசாணையை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
x
* சிறுபான்மை பள்ளிகள் அந்தஸ்து வழங்குவதற்கான கூடுதல் விதிகளை வகுத்து தமிழக பள்ளிக்கல்வித் துறை  2018 ஏப்ரல் மாதம் 5ம் தேதி அரசாணை பிறப்பித்தது. 

* அதன்படி, சிறுபான்மை பள்ளிகளில் 50 சதவீத சிறுபான்மையின மாணவர்களை சேர்க்க வேண்டும் என்றும், இந்த மாணவர் சேர்க்கை குறித்த விவரங்களை ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் பள்ளிக்கல்வித்துறைக்கு அறிக்கையாக அளிக்க வேண்டும் எனவும் அந்த அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

* இந்த அரசாணையை ரத்து செய்யக்கோரி 140 கல்வி நிறுவனங்களின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

* வழக்கை விசாரித்த நீதிபதி ராஜா, தேசிய சிறுபான்மை கல்வி நிறுவனங்கள் ஆணையச் சட்டத்தின் படி, சிறுபான்மை அந்தஸ்து தொடர்பாக உத்தரவு பிறப்பிக்க மாநில அரசுக்கு அதிகாரமில்லை எனக் கூறி, தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்து தீர்ப்பளித்தார்.

* தகுதியான சிறுபான்மை மாணவர்களை சேர்த்து கொள்வதாக சிறுபான்மை கல்வி நிறுவனங்கள் சார்பில் அளித்த உத்தரவாதத்தை, பள்ளிகள் மீறும்பட்சத்தில், மாநில அரசு, தேசிய சிறுபான்மை கல்வி நிறுவனங்கள் ஆணையத்திடம் புகார் தெரிவிக்கலாம் எனவும் நீதிபதி தன் உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்