10-வது இந்து ஆன்மிக கண்காட்சி துவக்க விழா - மடாதிபதி, ஆதீனத் தலைவர்கள் பங்கேற்பு

சென்னை வேளச்சேரியில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் தேச பக்தியை வலியுறுத்தி 10-வது இந்து ஆன்மிக கண்காட்சி துவக்கவிழா மங்கள வாத்தியங்கள் முழங்க கோலாகலமாக நடைபெற்றது.
x
சென்னை வேளச்சேரியில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் தேச பக்தியை வலியுறுத்தி 10-வது இந்து ஆன்மிக கண்காட்சி துவக்கவிழா மங்கள வாத்தியங்கள் முழங்க கோலாகலமாக நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வந்த காஞ்சி சங்கர மடத்தின் பீடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சுவாமிகளுக்கு மேளதாளம் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தருமபுரம் ஆதீனம், ஸ்ரீபெரும்புதூர் ஜீயர் சுவாமிகள், ஆரணி திருமலை மட ஜெயின் மடாதிபதி உள்ளிட்டோர் பங்கேற்றனர். புதுக்கோட்டை அவதுதா வித்யா பீடம் ஓம்காரனந்த சுவாமிகள் அருளுரை வழங்கினார். பிப்ரவரி 4-ம் தேதி வரை நடக்கும் இந்த இந்து சேவைக் கண்காட்சியை காலை 10 மணிமுதல் இரவு 9 மணி வரை கண்டுகளிக்கலாம்.

Next Story

மேலும் செய்திகள்